×

தீபாவளிக்கு பின்பு அதிரடியாக தங்கம் சவரனுக்கு 304 உயர்வு

சென்னை: தீபாவளிக்கு பின்பாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 உயர்ந்து 38 ஆயிரத்து 568க்கு விற்பனை  செய்யப்படுகிறது.
உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யும் வகையில் தங்களின் கவனத்தை தங்கத்தில் முதலீடு செய்து  வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை  தொடர்ந்து மாற்றம் கண்டு வருகின்றது.   
அந்தவகையில், தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக கிராமுக்கு ரூ.152ம், பவுனுக்கு ரூ.1,216 வரையும்  அதிகரித்தது.

இந்த விலை உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 11ம் தேதி தங்கத்தின்  விலை அதிரடியாக சரிந்தது. அன்றைய தினம்  சவரனுக்கு ₹1,248 குறைந்து ஒரு சவரன் ரூ.38,128க்கும் விற்கப்பட்டது.  இந்தநிலையில், தீபாவளிக்கு  பின்னர் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது. அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு  ₹38 உயர்ந்து ₹4,821க்கும், சவரனுக்கு ₹304 உயர்ந்து ₹38 ஆயிரத்து 568க்கு விற்பனை செய்யப்பட்டது.  



Tags : Diwali , In action after Deepavali 304 rise for gold razor
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது