அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனையும் அவலம்

சென்னை: மதுராந்தகம் அருகே அரசு கொள்முதல் செய்து வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மதுராந்தகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 10 ஆயிரம் நெல் மூட்டைகளை, அரசு அதிகாரிகள் திறந்த வெளியில் தார்பாய் போட்டு  மூடி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி  வருகின்றன.மேலும், சில நூறு நெல் மூட்டைகள் முளைத்து உணவுக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது.அதிகாரிகள்  பெயரளவுக்கு ஒரு சில  நெல் மூட்டை குவியலின் தார்பாய் போட்டு மூடி உள்ளனர். நேற்று வீசிய பாலத்த காற்றில் தார்பாய் கலைந்து நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி  வருகின்றன.

Related Stories:

>