டிவி நடிகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டி கொன்றேன்: கைதான இலங்கை அகதி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: பலமுறை எச்சரித்தும் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் டிவி நடிகரை வெட்டி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட  இலங்கை அகதி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை எம்.ஜி.ஆர். நகர் வள்ளல் பாரி தெருவை சேர்ந்தவர் செல்வரத்தினம் (41). இலங்கையை சேர்ந்த இவர், அகதியாக சிறு வயதிலேயே தனது  குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை டேம் காலனி அகதிகள் முகாமில் வசித்து வந்தார். செல்வரத்தினத்திற்கு திருமணம் நடந்து 3  குழந்தைகள் உள்ளனர். நடிப்பில் நாட்டம் இருந்ததால் சென்னையில் உள்ள நண்பர்கள் உதவியுடன் தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து  வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் செல்வரத்தினத்தை ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை  செய்தது.  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்து சென்றனர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட செல்வரத்தினம்  செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது, செல்வரத்தினம் பெண் ஒருவருடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. மேலும், அடிக்கடி பேசிய அழைப்புகளை வைத்து  விசாரணை நடத்திய போது, விருதுநகரில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் பெண் ஒருவருடன் அடிக்கடி செல்வரத்தினம் பேசி வந்தது  தெரியவந்தது.அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, நடிகர் செல்வரத்தினம் தொடர்பில் இருந்த பெண்ணின் கணவன் தனது நண்பர்களுடன்  சேர்ந்து கொலை செய்தது உறுதியானது. உடனே தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் விருதுநகரில் உள்ள அகதிகள் முகாமில் பதுங்கி இருந்த  கள்ளக்காதலியின் கணவன் விஜயகுமார் (38) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் குற்றவாளி விஜயகுமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:விருதுநகர் அகதிகள் முகாமில் நடிகர் செல்வரத்தினம் வீட்டின்  அருகே வசிக்கும் மற்றொரு இலங்கை அகதியான நண்பர் விஜயகுமார் மனைவி டயானாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் விஜயகுமார் டைல்ஸ்  ஒட்டும் வேலையும், டயானா டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சின்னத்திரையில் செல்வரத்தினம் நடிப்பதால் நண்பர் மனைவி  உடனான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் செல்வரத்தினத்தின் கள்ளக்காதலால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் செல்வரத்தினத்துடன் சென்னையில் அவரது மனைவி வசிக்காமல் விருதுநகரில் உள்ள அகதிகள்  முகாமிலேயே தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கள்ளக்காதலியின் கணவர் விஜயகுமாரும் பலமுறை செல்வரத்தினம் மற்றும் அவரது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும்  கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை. அகதிகள் முகாமில் விஜயகுமாரை பார்த்து பலர் கேலி கிண்டல் செய்துள்ளனர்.இதற்கிடையே செல்வரத்தினம் தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதனால் சென்னையில் இருந்து அடிக்கடி விருதுநகருக்கு  செல்ல முடியவில்லை. ஆனால் தனது கள்ளக்காதலியை மட்டும் ஒவ்வொரு வாரமும் விருதுநகரில் இருந்து சென்னைக்கு அழைத்து தனது வாடகை  வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். தீபாவளி அன்று விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக அவரது கணவர் விஜயகுமாரிடம்  கூறிவிட்டு செல்வரத்தினத்தை பார்க்க சென்னைக்கு டயானா வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் தனது மனைவிக்கு தெரியாமல்  சென்னை வந்துள்ளார்.

அன்று இரவு முழுவதும் செல்வரத்தினத்தின் வீட்டின் அருகே காத்திருந்து அதிகாலை செல்வரத்தினம் வெளியே வரும் போது தனது நண்பர்களுடன்  சேர்ந்து விஜயகுமார் வெட்டி கொலை செய்தார். பின்னர் ஒன்றும் தெரியாதபடி விஜயகுமார் விருதுநகருக்கு சென்று விட்டார். ஆனால் சிசிடிவி மற்றும்  செல்போன் உதவியுடன் விஜயகுமாரை கைது செய்தோம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.உறவினர் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு செல்வரத்தினத்தை பார்க்க சென்னைக்கு டயானா வந்துள்ளார்.

Related Stories:

>