×

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக 2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சம் நிதியை திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த 5 கோடியில் கிடைக்கும் வட்டியில், மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித்  தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை வழங்கப்பட்டு வருகிறது. 5 கோடியில் 1 கோடியை தென்னிந்திய புத்தக  விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு 2007ல் வழங்கினார்.

மீதமுள்ள ரூ.4 கோடியில் கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 5 கோடியே 15 லட்சத்து 90 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாத வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி  உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர்  வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது. இந்த தகவலை  திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.



Tags : MK Stalin ,Artist Karunanidhi Foundation , On behalf of the Artist Karunanidhi Foundation 2 lakhs for medical and education for 8 persons: provided by MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...