4வது முறையாக அரியணையில் ஏறினார் நிதிஷ்குமார்..!! பீகார் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பாகு சவுகான்

பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல்வராக, தொடர்ந்து 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பதவியேற்றார். பீகார் முதல்வராக 7வது முறையாகவும் தொடர்ந்து 4வது முறையாகவும் நிதிஷ்குமார் பதவி ஏற்றார். பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் நிதிஷ்குமாருக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி மொத்தம் 125 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. பீகாரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள். இந்த நிலையில் பீகாரில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. பாட்னாவில் ஆலோசனை பாட்னாவில் ஆலோசனை பாட்னாவில் ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பங்கேற்றார். பீகாரில் பாஜகவை விட மிக குறைவான இடங்களில்தான் ஜேடியூ வெற்றி பெற்றுள்ளது. பாஜக 74 இடங்களிலும் ஜேடியூ 43 இடங்களிலும் வென்றிருக்கிறது. முதல்வராக நிதிஷ்குமார் முதல்வராக நிதிஷ்குமார் இருப்பினும் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி ஜேடியூவின் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக நேற்றைய கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனடிப்படையில் அக்கூட்டத்தில் நிதிஷ்குமார் ஒருமனதாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று பாட்னாவில் நடைபெறும் விழாவில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். நிதிஷ் குமாருக்கும், அவரது மந்திரிசபையில் இடம்பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிதிஷ் குமாருடன் 14 அமைச்சர்களுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>