×

சென்னை மாநகராட்சியில் 39.40 லட்சம் வாக்காளர்கள் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை  :சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதன்படி மொத்தம் வாக்காளர் எண்ணிக்கை 39.40 லட்சம் ஆகும்.தற்போது வெளியிடப்பட்டுள்ள வரை வாக்காளர் பட்டியல் படி சென்னையில் 19,39,694 ஆண்கள், 19,99,995 பெண்கள், 1015 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 39,40,407 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 481 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 189 வாக்காளர்களும் உள்ளனர்.


Tags : Prakash ,voters ,Chennai Corporation , Chennai Corporation, Voters, Corporation Commissioner
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...