நாளை பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டப்படி தொடரும்: பாஜக தலைவர் எல்.முருகன்

சென்னை: பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டப்படி நாளை தொடங்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்போரூர் முருகன் கோயிலுக்கு யாத்திரை நடைபெறும். வேல் யாத்திரையில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படுகின்றன என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா சார்பில் கடந்த 6-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 6-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்த யாத்திரைக்கு கொரோனாவை காரணம் காட்டி அரசு அனுமதி மறுத்துவிட்டது. இருப்பினும் தடையை மீறி திருத்தணியில் இருந்து கடந்த 6-ந்தேதி வேல் யாத்திரை தொடங்கியது. யாத்திரையில் கலந்துகொண்ட மாநில தலைவர் எல்.முருகன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். தீபாவளி விடுமுறைக்கு பிறகு நாளை (17-ந்தேதி) திருவண்ணாமலையில் இருந்து யாத்திரை தொடங்க வேண்டும்.

இந்தநிலையில் நேற்று முதல் 100 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியையும் அரசு ரத்து செய்துவிட்டது. தமிழக பாஜக தலைவர் கூறுகையில், வேல் யாத்திரை திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறுவதற்காக எம்பெருமாளை வேண்டினேன் என்றார். வேல் யாத்திரை அடுத்த மாதம் 6-ந்தேதி திருச்செந்தூரில் முடிவடைவதாக திட்டமிடப்பட்டது. இப்போது அது ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு 7-ந்தேதி நிறைவுநாள் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>