ஏடிபி பைனல்ஸ் தொடர்; நடால், டொமினிக் தீம் வெற்றி

லண்டன்: ஆண்டு தோறும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தரவரிசையில் டாப் 8 இடத்தில் உள்ள வீரர்கள் கலந்துகொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டு ஏடிபி சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில், டோக்கியோ 1970’ என்ற பெயரிலான குரூப்பில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), டேனில் மெட்விடேவ் (ரஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டியாகோ ஸ்வாட்ஸ்மேன் (ஜெர்மனி), ‘லண்டன் 2020’ என்ற பிரிவில் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று நடந்த முதல் போட்டியில், லண்டன் 2020 பிரிவில் இடம்பெற்றுள்ள டொமினிக் தீம், சிட்சிபாஸ் மோதுகின்றனர். இதில், டொமினிக் தீம் 7-6,4-6,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து இன்று அதிகாலை நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால்- ஆந்த்ரேரூப்வெல் மோதினர். இதில், நடால், 6-3,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இன்று இரவு 7.30 மணிக்கு டோக்கியோ 1970 பிரிவில் ஜோகோவிச்-ஜெர்மனியின் ஸ்வாட்ஸ்மேன் மோதுகின்றனர்.

Related Stories: