ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலையை திறக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட்டின் இடைக்கால கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலையை மூட வேண்டும்வென்று முடிவெடுத்தது அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு கூறியுள்ளது. இடைக்கால நிலவாரணம் கோர ஆலைக்கு எந்த முகாந்திரமும் கிடையாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தமிழக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்வதற்கு முன்னர் ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறபிக்க கூடாது என தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>