×

பழையகோட்டையில் ரூ.12 லட்சத்துக்கு காங்கயம் மாடுகள் விற்பனை

காங்கயம்:  காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான வாரச் சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும். இதில் நேற்று 58 கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 72  ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40 வரை விற்பனையானது,  காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ45 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 38 கால்நடைகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Kangayam ,Palayakottai , Kangayam cows for sale for Rs. 12 lakhs in Palayakottai
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது