×

சேதுபாவாசத்திரம் பகுதியில் இரண்டு ஆண்டுகளை கடந்தும் கஜா புயலின் மாறாத வடுக்கள்

சேதுபாவாசத்திரம்: கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்தேதி அதிகாலை கரை கடந்த கஜா புயல் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கோரத்தாண்டவம் ஆடிச்சென்றது. இதனால் வாழ்வாதாரமாக இருந்த 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த தென்னைகளில் சுமார் 1.50 லட்சம் தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. அதுமட்டுமின்றி பல ஆயிரம் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்தது. மா, பலா, வாழை, தேக்கு என லட்சக்கணக்கான மரங்களை கஜா புயல் சூறையாடியது. பல ஆயிரம் ஆடு, மாடுகளையும் விட்டு வைக்கவில்லை. தென்னைகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு இயங்கிவந்த 200க்கும் மேற்பட்ட கயறு தொழிற் சாலைகளை தரைமட்டமாக்கியது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகளிலதான் மீனவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. இங்கு 34 மீனவ கிராமங்களில் சுமார் 6000 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 310 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இருந்தன. அதையும் விட்டுவைக்காமல் 188 விசைப்படகுகளையும், 1500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளையும் பகுதி சேதமாகவும், சுக்கு நூறாகவும் நொறுக்கி சென்றது. மின்சாரத்தை
சரி செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகும் அளவிற்கு சுமார் லட்சகணக்கான மின்கம்பங்களையும் நூற்றுக்கணக்கான டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்தது.

பொதுவாக பொதுமக்களின் வாழ்கையை 50 ஆண்டுகாலம் பின்நோக்கி தள்ளியது. இரண்டு ஆண்டுகளாகியும் தென்னை மரங்கள் ஒருசில இடங்களில் அப்புறபடுத்தவில்லை. அப்புறபடுத்திய இடங்களில் தென்னங்கன்றுகள் முழுமையாக நடப்படவில்லை, படகுகள் தயார் செய்யப்படவில்லை. இன்னமும் முழுமையான இயல்பு நிலை திரும்பாமல் மாறாத வடுக்களாகவே உள்ளது. தற்போதைய நிலை: ஆறு மாதங்களுக்கு பின் தென்னை ஒன்றுக்கு 1100 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கியது. அதன் பின் தென்னைகள் அப்புறப்படுத்தப்பட்டு பெரும்பாலான இடங்களில் தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

பல்வேறு தொண்டு நிறுவனங்கள் விதைப் பந்துகள் தயார் செய்து வினியோகித்தும் மா, பலா போன்ற கன்று வகைகளையும் நட்டுவருகின்றனர். விசைப்படகுகளுக்கு அரசு வழங்கிய பகுதி சேத நிவாரணம் 3 லட்சமும் முழு சேத நிவாரணம் 5 லட்சத்தையும் பெற்று 310 படகுகளில் 146 படகுகள் தாயார் செய்து தொழிலில் ஈடுபட்டுள்ளது. அரசு வழங்கிய நிவாரணம் போதவில்லை என கூறி நிவாரணத்தை உயர்தி வழங்க கோரி மீனவர்கள் இன்றுவரை கூறி வருகின்றனர். கயறு தொழிற் சாலைகளுக்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. எனவே ஒருசில கயறு தொழிற் சாலைகள் மட்டும் சொந்த செலவில் மராமத்து செய்து இயங்கி வருகிறது மற்றவை செயல்படவில்லை. இதுதான் சேதுபாவாசத்திரம் பகுதியின் தற்போதைய நிலையாக உள்ளது.

* கொட்டும் மழையில் மரக்கன்று நடும்பணி
பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டையில் கஜா புயலால் வேரோடு சாய்ந்த 4,000க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஏரிக்குள் போட்டுவிட்டனர். இளைஞர்கள், கடந்த மாதம் 24ம் தேதி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் ஏரியை சீரமைக்கும் பணியை தொடங்கினர். இதையொட்டி சுமார் 15 நாட்கள் சீரமைப்பு பணிகள் முழுவதையும் மேற்கொண்டனர். ஏரி மறு சீரமைப்பு பணி 13ம் தேதியோடு நிறைவு பெற்றது. நேற்று அந்த ஏரிக்குள் மரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மேட்டூர் அணையை வடிவமைத்து, கல்லணைக் கால்வாயை உருவாக்கிய நீர் மேலாண்மையின் சிற்பி பொதுப்பணித்துறை அதிகாரி கர்னல் எல்லீஸ் நினைவாக ஏரியின் நடுவில் 1,000 சதுரடியில் மண் திட்டு ஒன்று அமைத்து அதில் மரக்கன்றுகள் நட்டு, அந்த மண் திட்டுக்கு எல்லீஸ் சதுக்கம் என்று பெயர் வைத்த நிகழ்ச்சி அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags : area ,Hurricane Kazha ,Sethupavasathiram , The indelible scars of Hurricane Gaja, which has been in the Sethupavasatram area for two years
× RELATED வாட்டி வதைக்கும்...