×

ரூ.103 கோடிக்கு விற்று தமிழக அளவில் ‘டாப்’ தீபாவளி மது விற்பனையில் மதுரை மண்டலம் முதலிடம்

மதுரை: தீபாவளி பண்டிகைக்கு ரூ.103 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகி, மதுரை மண்டலம், தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. பண்டிகை காலங்களில் அதிகளவில் மது விற்க தமிழகத்தில் ரூ.320 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. குடவுன்களில் இருந்து லாரிகள் மூலம் மதுபான சரக்குகள் அந்தந்த கடைகளுக்கு இரு தினங்களுக்கு முன்பே கொண்டு செல்லப்பட்டது. தீபாவளி தினத்தில் மதுரை மண்டலத்தில் மதுபானம் சுமார் ரூ.103 கோடிக்கு விற்பனையானது. சென்னை மண்டலத்தில் ரூ.94 கோடிக்கும், திருச்சி ரூ.95 கோடிக்கும், சேலம் ரூ.87 கோடிக்கும், கோவையில் ரூ.84 கோடிக்கும் சரக்கு விற்பனையானது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி தமிழகத்தில் ரூ.466 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. ரூ.103 கோடி அளவுக்கு விற்பனையானதன் மூலம், பிற மண்டலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, மதுரை மண்டலம் தமிழகத்
தில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில், கடந்த தீபாவளிக்கு இரு தினங்களில் ரூ.455 கோடிக்கு மதுவிற்பனையாகி இருந்தது. நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மது விற்பனை மதுரை மண்டலத்தில் மேலும் அதிகரிக்கும் எனத்தெரிகிறது.

Tags : region ,Madurai ,Tamil Nadu , Madurai region tops 'Top' Diwali liquor sales in Tamil Nadu for Rs 103 crore
× RELATED இடுக்கி பகுதியில் அனல் வெயிலால் கருகும் ஏலச் செடிகள்