×

8 மாதங்களுக்கு பிறகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் திருப்பணி மீண்டும் துவங்கியது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் கொரோனாவால் தடைபட்டுக் கிடந்த, ரூ.5 கோடி மதிப்பிலான புனரமைப் புப் பணிகள் 8 மாத ங்களுக்குப்பிறகு தொடங்கியது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில், அருள்மிகு மதுரகாளியம் மன் திருக்கோயில் உள்ளது. இந்துசமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோவில், பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. புகழ்பெற்ற இக்கோயிலை புனரமைக்க கடந்த 6 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு 2020ல் கோவில் புனரமைப்பு பணிகள் பிப்ரவரியில் தொடங்கியது. கொரோனா தொற்றுப் பரவலால் மார்ச் மாத இறுதியில் கோவில் மூடப்பட்டதால் தடைபட்ட திருப்பணிகள், 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பாக திருக்கோவிலின் ராஜகோபுரம், விமானம் புனரமைக்கப்படுவதோடு, 40 அடி உயரத்திற்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள கோவிலின் பிரதான நுழைவு வாயில், பக்தர்களுக்கான சுற்று வரிசை, கோவில் உட்புறமும், வெளிப்புறமும் தரைத்தளம் கிரானைட் கற்களில் அமைக்கும் பணிகள், புதிதாக கிழக்குப்புற நுழைவுவாயில் அமைத் தல், சுற்றுச்சுவர் அமைத்தல், பக்தர்களுக்கான கூடுதல் கழிப்பறை வசதி, நேர் த்திக் கடனுக்காக மொட் டைஅடிக்கும் வளாகம் போன்ற பணிகள் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் தொடங்கியுள்ளன. இப்பணிகளை கோவில் செயல்அலுவலர் (பொ) யுவராஜ், கண்காணிப்பாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் கிராம முக்கிய பிரமுகர்களு டன் இணைந்து செய்து வருகின்றனர்.

* 18 வருடமாகிறது
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2002ம் ஆண்டு நடத்தப்பட்டது. 12 ஆண்டுகள் கழித்து மறு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இதன்படி 2014ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில், கோவில் புனரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த புனரமைப்பு பணிகளுக்காக கடந்த 6 ஆண்டுகளாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்த நிலையில், லோக்கல் கமிட்டி, ஸ்டேட் கமிட்டி, ஐகோர்ட் கமிட்டி ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் தான் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Siruvachchur Madurakaliamman Temple , After 8 months, the work on the Siruvachchur Madurakaliamman Temple resumed
× RELATED சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில்...