×

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 6.10 கோடி வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

சென்னை : தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். அதில், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,44,358 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,01,12,370 ஆக இருக்கிறது. பெண் வாக்காளர்கள் 3.01 கோடியாக உள்ளனர்.

80 வயதுக்கு மேற்பட்டோர் மாவட்ட வாரியாக வாக்களார் வரைவு பட்டியலில்:

திருவள்ளூரில் 57,982, சென்னையில் 112,344, காஞ்சிபுரத்தில் 27, 324, வேலூரில் 25,639, கிருஷ்ணகிரியில் 30,590, தருமபுரியில் 26,266, திருவண்ணாமலையில் 52,239, விழுப்புரத்தில் 35,561, சேலத்தில் 71,220, நாமக்கலில் 39,807, ஈரோட்டில் 52,573, நீலகிரியில் 8557, கோவையில் 68,835, திண்டுக்கலில் 38,039, கரூரில் 20,301, திருச்சியில் 54,611, பெரம்பலூரில் 11,803, கடலூரில் 41,477, நாகையில் 28,683, திருவாரூரில் 20,547, தஞ்சையில் 49,288, புதுக்கோட்டையில் 28,214, சிவகங்கையில் 32,085, மதுரையில் 47,416, தேனியில் 25,352, விருதுநகரில் 30,497, ராமநாதபுரத்தில் 23,001, தூத்துக்குடியில் 32,735, கன்னியாகுமரியில் 29,320, திருநெல்வேலியில் 38,188 அரியலூரில் 11,742, திருப்பூரில் 66,390, கள்ளக்குறிச்சியில் 18,338, தென்காசியில் 31,217, செங்கல்பட்டில் 50,696, திருப்பத்தூரில் 15,902, ராணிப்பேட்டையில் 20,419 வாக்களார்கள் புதிதாக சேர்ந்து மொத்தமாக 13,75,198-யாக உள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்டோர் மாவட்ட வாரியாக வாக்களார் வரைவு பட்டியலில்: 

திருவள்ளூரில் 11,464, சென்னையில் 14,073, காஞ்சிபுரத்தில் 4,931, வேலூரில் 5694, கிருஷ்ணகிரியில் 5213, தருமபுரியில் 4,608, திருவண்ணாமலையில் 5,151, விழுப்புரத்தில் 3,621, சேலத்தில் 9,166, நாமக்கலில் 33,80, ஈரோட்டில் 82,32, நீலகிரியில் 2,317, கோவையில் 15,165, திண்டுக்கலில் 58,48, கரூரில் 2,914, திருச்சியில் 64,48, பெரம்பலூரில் 15,14, கடலூரில் 74,86, நாகையில் 3,922, திருவாரூரில் 3,714, தஞ்சையில் 49,25, புதுக்கோட்டையில் 3,122, சிவகங்கையில் 3,562, மதுரையில் 12,501, தேனியில் 3,123, விருதுநகரில் 4,186, ராமநாதபுரத்தில் 7,671, தூத்துக்குடியில் 3,518, திருநெல்வேலியில் 5,008 கன்னியாகுமரியில் 3,599, அரியலூரில் 1,022, திருப்பூரில் 7,822, கள்ளக்குறிச்சியில் 2,706, தென்காசியில் 3,434, செங்கல்பட்டில் 9,414, திருப்பத்தூரில் 4,255, ராணிப்பேட்டையில் 3,614 வாக்களார்கள் புதிதாக சேர்ந்து மொத்தமாக 2,08,413-யாக உள்ளனர்.

Tags : Satya Pradha Saku ,voters ,Tamil Nadu , In Tamil Nadu, the draft voter list was released by Satya Pradha Saku
× RELATED ராசிபுரம் போதமலையில் உள்ள 1,142...