×

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர்!!

சென்னை : தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டார். அதில், தமிழகத்தில் மொத்தமாக 6,10,44,358 வாக்காளர்கள் இருப்பதாகவும் 3.03 கோடி பெண் வாக்காளர்கள், 3.01 கோடி ஆண் வாக்காளர்கள், 3ம் பாலினத்தவர்கள் 6,385 பேர் இருப்பதாகவும் அறிவித்துள்ளார். மேலும் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.05 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : voters ,Tamil Nadu , Tamil Nadu, Draft Voter, List, Voters
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...