×

ஒருவர் வகிக்கும் பதவியால் அவரது நிலை தீர்மானிக்கப்படுவதில்லை: சுஷில் மோடிக்கு கிரிராஜ் சிங் பதில்

பீகார்: பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதையடுத்து 4-வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகப் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்தநிலையில் பீகார் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தர்கிஷோர் பிரசாத், சட்டப்பேரவைக் கட்சித் துணைத் தலைவராக ரேணு தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநில துணை முதல்வராக இருந்து வரும் சுஷில் குமார் மோடியே பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்த முறை சுஷில் குமார் மோடி அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படாத நிலையில் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இருவரும் பீகார் மாநில துணை முதல்வர்களாக பதவி ஏற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக சுஷில் குமார் மோடி மத்திய அமைச்சராக வாய்ப்பு என கருதப்படுகிறது. இதுகுறித்து சுஷில் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பாஜக மற்றும் சங் பரிவார் ஆசியுடன் கடந்த 40 ஆண்டுகாலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன்.

கட்சித் தொண்டர் என்ற பொறுப்பை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது என தெரிவித்தார். இதற்கு பீகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மதிப்பிற்குரிய சுஷில் குமார் மோடி அவர்களே நீங்கள் ஒரு தலைவர் எனவே துணை முதல்வராக இருக்கிறீ்ர்கள். எதிர்காலத்திலும் பாஜகவில் தொடர்ந்து தலைவராகவே இருப்பீர்கள். ஒருவர் வகிக்கும் பதவியால் அவரது நிலை தீர்மானிக்கப்படுவதில்லை என சுஷில் குமார் மோடிக்கு கிரிராஜ் சிங் பதிலளித்தார்.


Tags : Sushil Modi ,Giriraj Singh , His position is not determined by the position he holds: Giriraj Singh's reply to Sushil Modi
× RELATED புற்றுநோயுடன் போராடுவதால் தேர்தலில் போட்டியில்லை: சுஷில் மோடி