×

7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது!!

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் சேரும் மாணவர்களுக்கு தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் முதல் இடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனப்பிரபா 705 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.சென்னை அயனம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தை பிடித்தார்.மொத்தம் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.7.5%உள் ஒதுக்கீட்டின்படி மாணவன் ஜீவித்குமார் முதலிடம் பிடித்தார்.

Tags : government school students , Government School Students, Medical College
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட,...