×

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்கள். தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 12.35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கூடுதலாக 2,461 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்ட வாக்காளர்களில் ஆண்கள் 6.08 லட்சம், பெண்கள் 6.27 லட்சம், 3ம் பாலினம் 138 பேர் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 15ம் தேதி வரை ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் 21 மற்றும் 22ம் தேதி (சனி, ஞாயிறு), டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்ப உள்ளது. தேர்தல் கமிஷனும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று முதல், டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வசதிக்காக இம்மாதம் 21, 22-ம் தேதிகளிலும், டிசம்பர் 12, 13-ம் தேதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது, ஜனவரி 5-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு, ஜனவரி 20-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 2021 ஜனவரி 1ல் 18 வயது பூர்த்தியாவோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

Tags : elections ,Assembly ,Tamil Nadu , In Tamil Nadu, Assembly Elections, Draft Voter List, Release
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...