×

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த ‘டிராகன் க்ரூ-1 கப்ஸியூல்‘ விண்கலம் 4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது...

வாஷிங்டன்: டிராகன் க்ரூ-1 கப்ஸியூல் விண்கலத்தில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு இன்று காலை விண்ணில் 4 வீரர்களுடன் பாய்ந்தது. அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக தனது முதல் விண்கலத்தை ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலத்திற்கு க்ரூ டிராகன் என பெயரிடப்பட்டது. எலோன் மஸ்க் தலைமையிலான இந்த நிறுவனம் நாசாவுடன் இணைந்து இதற்கான பணிகளை நீண்ட காலமாக மேற்கொண்டது. க்ரூ டிராகன் விண்கலத்தில் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்ததால் அதில் பயணிக்கும் விஞ்ஞானிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்த விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் சென்று வர திட்டமிடப்பட்டது.

இதற்காக க்ரூ டிராகன் விண்கலம் மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த மாதம் க்ரூ டிராகன் விண்கலத்தை (ஆளில்லா விண்கலம்), சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி சோதனை செய்தனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இந்த விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தனர். அதேசமயம் விண்கலத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து என்ஜின் சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கேப் கனரவல் ஏவுதளத்தில் வைத்து கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மீண்டும் என்ஜின் சோதனை செய்யப்பட்டது. அப்போது திடீரென விண்கலம் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் எழுந்தது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாசாவோ, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமோ இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், க்ரூ டிராகன் விண்கலம் சோதனை செய்யப்பட்டபோது வெடித்து சிதறியதை அமெரிக்காவின் எம்பியும், நாசாவுக்கான பட்ஜெட் கமிட்டி தலைவருமான ரிச்சர்டு ஷெல்பி உறுதி செய்தார். விண்கலம் ஒழுங்கற்று இயங்கியதால் முற்றிலும் அழிந்துவிட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாக விசாரணையின்போது ஷெல்பி தெரிவித்திருந்தார்.

ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)  நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன் க்ரூ-1 கப்ஸியூல்‘ (Dragon Crew-1 capsule) விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் 4 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளி வீரர்கள் மற்றும் க்ரூ டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ரொக்கெட் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 27 மணி நேரத்தில் டிராகன் க்ரூ விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடையும். விண்வெளி வீரர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகின்றது.

Tags : SpaceX ,Dragon Crew ,American ,soldiers , The ‘Dragon Crew-1 Capsule’ spacecraft manufactured by the American company SpaceX flew with 4 soldiers ...
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை