கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்(20). இவர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது கல்லூரி நண்பர்களுடன் பழவேற்காடு அருகே கடலில் குளிக்க சென்றார்.

அப்போது அவரை ராட்சத அலைகள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அவரது நண்பர்கள் லோகேஷை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் ராட்சத அலையில் சிக்கி அவர் மூழ்கினார். இது குறித்து, திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் அவரது நண்பர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், திருப்பாலைவனம் போலீசார், பொன்னேரி தீயணைப்புத்துறையினர் மற்றும் பழவேற்காடு மீனவர்கள் கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>