கும்மிடிப்பூண்டி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் லோடு ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் திருட்டு, தேர்வழி பகுதியில் அரசு பள்ளியில் திருட்டு, பழைய மோட்டார் வாங்கும் கடையில் மோட்டார்கள் திருட்டு, பூட்டி கிடக்கும் வீடுகளில் திருட்டு என பல தொடர் குற்றச்சம்பவங்கள் கடந்த 2 மாதங்களில் நடந்தது. இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தனிப்படை அமைத்திருந்தார். இந்நிலையில் இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக தேர்வழி பகுதியை சேர்ந்தவர் குகன்(22), பாக்யராஜ்(23), சுரேஷ்(22),சூர்யா(21), திருமலை(22), விஜயகுமார்(27) ஆகிய 6 பேரை கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மேற்கண்ட குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.  அவர்களிடம் இருந்து லோடு ஆட்டோ, இருசக்கர வாகனம், பழைய மோட்டார் கடையில் மோட்டார்களை திருடி அதில் இருந்த தாமிரக் கம்பிகளை விற்று சேர்த்த 1 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 6 பேரும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

>