கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர்கள் கைது

ஆவடி:  ஆவடி, பெரியார் நகர், பூங்கா அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆவடி போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பூங்கா அருகில் இருவர் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து, போலீசார் ஆட்டோவுடன், 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர், ஆவடி ஆதிபராசக்தி நகர் கலைஞர் தெருவை சேர்ந்த மணிகண்டன் (37), கோவில்பதாகை, வள்ளுவர் தெருவை சேர்ந்த முரளி (29) இரு ஆட்டோ டிரைவர்களை கைது செய்தனர்.

Related Stories:

>