×

விபத்தில்லா தீபாவளி மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு தீபாவளி கூடுதல் உற்சாகத்துடன் திருவள்ளூர் மக்களால் கொண்டாடப்பட்டது.  பட்டாசு வெடிப்பது குறைந்து, தீ விபத்துக்களும் இல்லாமல் நிறைவு பெற்றது பண்டிகை. வெள்ளிக்கிழமை இரவிலிருந்தே, தீபாவளி உற்சாகம் நகரில் களை கட்டத் துவங்கியது. நேற்றமுன்தினம் இரவையும் பகலாக்கும் வகையில், வீடுகள் தோறும் வெடி வெடித்தும், வண்ண மயமான பட்டாசுகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். இரவு முழுக்க நகருக்குள், மக்கள் நடமாட்டம் இருந்தது.

தீபாவளி பண்டிகையான நேற்றுமுன்தினம் காலை புத்தாடை அணிந்து, குடும்பம் சகிதமாக கோயில்களுக்கு பலர் சென்றனர். கிராமங்களில், கோயில் மற்றும் பொது மைதானங்களில் வெடி வெடித்து ஆரவாரமாய் பண்டிகை கொண்டாடினர். பேக்கரி, ஓட்டல்கள் செயல்பட்டன. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதால், சிறுவர்கள் சாலையில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் பட்டாசு சத்தம் சற்று குறைவாகத் தெரிந்தது. தீ விபத்தை தவிர்க்க மாவட்டம் முழுவதும், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், இந்தாண்டு தீ விபத்தின்றி தீபாவளி கழிந்தது.

Tags : Diwali , Accident-free Diwali People are happy
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...