திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வரும் 19ல் காஞ்சிபுரம் வருகை: பொதுப்பிரச்னை கோரிக்கையை குழுவிடம் அளிக்கலாம்

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, க.சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற உளள சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழு  வரும் 19 ம் தேதி காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகில் உள்ள எம்எம் கேலக்சி மகால் கூட்ட அரங்கிற்கு வருகை தருகின்றனர். அப்போது திமுக வின் அனைத்து நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோரிடம் தங்கள் பகுதியில் உள்ள பொதுப் பிரச்சினைகள், அவர்களுக்கான பிரச்சினைகள் குறித்து அறிக்கை தயாரித்து தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் அளிக்கலாம்.

மேலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோர், மகளிர் சுயஉதவிக் குழுவினர், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், சிறுதொழில் ஆலை உரிமையாளர்கள், ஜல்லி ஆலை உரிமையாளர்கள், ஜவுளி ஆலை உரிமையாளர்கள், மாணவர்கள், பெண்கள் நல அமைப்பு ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை மனுவாகத் தயாரித்து தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் அளிக்கும் வகையில் தயார் செய்ய வேண்டும். மேலும் பொதுமக்களும் தங்கள் பகுதி பிரச்சினைகளை மனுவாகத் தயாரித்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் வழங்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Related Stories:

>