குழந்தைகள் தினவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் டிரீம்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவுக்கு டிரீம்ஸ் தொண்டு நிறுவன நிர்வாகி சீயோன் குமாரத்தி தலைமை தாங்கினார். குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளியை முன்னிட்டு கரசங்கால் பகுதி நரிக்குறவர் குழந்தைகள், மேட்டுக்கொளத்தூர் கே.கே.நகர் இருளர் காலனி குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு மற்றும் சுகாதாரத்தின் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சுமார் 100 குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. உதவும் உள்ளம், டிரஸ்ட் வே பவுண்டேஷன் இணைந்து நடத்திய இந்த விழாவில் டிரீம்ஸ் பவுண்டேஷன் திட்ட இயக்குநர் டேவிட் பால் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆசிர் பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>