கொரோனாவுக்கு பிரபல நடிகர் பலி

சென்னை: பிரபல வங்காள நடிகர் சவுமித்ர சட்டர்ஜி (85), கொரோனா தொற்றுக்காக கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.சத்யஜித் ரே இயக்கிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவர், சவுமித்ர சட்டர்ஜி. சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ள அவர், 2004ல் பத்மபூஷண் விருதும், 2012ல் தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றிருக்கிறார்.

அவரது மரணம் குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா பரிசோதனைக்கு பிறகு கடந்த அக்டோபர் 6ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுமித்ர சட்டர்ஜி, பிறகு நோய்த்தொற்றில் இருந்து மீண்டார். ஆனால், கடுமையான சில நோய்களால் அவதிப்பட்ட அவரது உடல்நிலை தேறவில்லை. நேற்று மதியம் 12.15 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>