மெரினாவில் பைக் ரேஸ் 10 பேர் சிறையிலடைப்பு

சென்னை: தீபாவளி அன்று நள்ளிரவு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தரவுப்படி போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சென்னை முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதன்படி, திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார், மெரினா காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பைக் ரேசில் ஈடுபட்ட 10 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்ட 10 பேர் மீதும் போக்குவரத்து போலீசார் ஐபிசி 308, 114, 184, 188, மோட்டார் வாகன சட்டம் 189 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அனைவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>