×

சசிகலாவின் அண்ணன் மரணம்

தஞ்சை: தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்தவர் சுந்தரவதனம் (78). இவர் சசிகலா, திவாகரனின் அண்ணன் ஆவார். இவரது மனைவி சந்தானலட்சுமி. இவர்களுக்கு அனுராதா, வெங்கடேஷ், பிரபா சிவக்குமார் ஆகிய 3 பிள்ளைகள். இதில் அனுராதா தனது அத்தை மகனான அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சுந்தரவதனம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவரது உடல் தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள், பல்வேறு கட்சியினர் அஞ்சலிக்குப்பின் நேற்று மாலை ஊர்வலமாக மேலவஸ்தாசாவடியில் உள்ள மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு முடிந்ததும் சுந்தரவதனம் உடல் தகனம் செய்யப்பட்டது.



Tags : Death ,Sasikala ,brother , Of Sasikala Brother's death
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!