×

பெற்றோருடன் கடலில் குளித்தபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி 4 சிறுவர்கள் பலி?

* காப்பாற்ற முயன்ற வாலிபர் உடல் மீட்பு * காசிமேடு அருகே சோகம்

சென்னை: காசிமேடு அருகே குடும்பத்துடன் கடலில் குளித்த 4 சிறுவர்கள் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட 19 வயது வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்னை வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் வசிக்கும் மூன்று குடும்பத்தினர் நேற்று மாலை தங்களது குழந்தைகளுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரைக்கு சென்றனர். அங்கு இவர்கள் கடலில் குளித்து விளையாடியபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி, 4 சிறுவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மீனவர்கள் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாரும், மீனவர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட 19 வயது வாலிபர், அலையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் அருள்ராஜ் (19) என்பது தெரிந்தது. இவர், தனது குடும்பத்துடன் வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் வசித்து வந்ததும் தெரிந்தது. இவரது தங்கை துர்கா (17), பக்கத்து வீட்டை சேர்ந்த ஜான்சன் மகள் மார்க்கிரேட் (13), மகன் மார்டின் (13) இவர்கள் இரட்டையர்கள், பாபு மகன் விஷ்ணு (14) ஆகியோர் கடல் அலையில் சிக்கி மாயமானதும் தெரிந்தது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags : Tragedy ,boys ,sea ,parents , Tragedy while bathing in the sea with parents 4 boys killed in giant wave?
× RELATED அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி