×

நீதிமன்ற உத்தரவு எதிரொலி கோயில் அறங்காவலர் விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்: அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.  அதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அந்தந்த கோயில் அறிவிப்பு பலகையில், அறங்காவலர், நிர்வாகி, தக்கார் பெயர், பதவி பெயர், தொலைப்பேசி எண், அவர்களுடைய தொழில் விவரம், கோயில்களில் அவர்களது பணி மற்றும் கோயில்களின் செயல் அலுவலர் தொலைப்பேசி விவரங்களையும் பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்திட உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தத்தம் பிரிவின் கீழ் வரும் கோயில்களுக்கு செயல்படுத்திடவும் மண்டல இணை ஆணையர்/ உதவி ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இப்பணி 12 வாரத்தில் முடிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தால் காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இப்பணியில் சுணக்கம் ஏற்படாது உடன் நடவடிக்கை எடுத்திடவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மண்டல இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், உதவி ஆணையர்களிடம் இருந்து (பட்டியலை சேர்ந்த மற்றும் பட்டியலை சேராத கோயில் விவரம் உட்பட) கோயில்களின் அறிவிப்பு பலகையில் விளம்பரபடுத்தப்பட்டமைக்கான விவரம் குறித்து உரிய அத்தாட்சியுடன் அறிக்கை பெற்று தொகுத்து ஆணையர் அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Court Order Echo Temple Trustee , Echo of the court order Temple Trustee to advertise details: Order of the Commissioner of Trusts
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...