ராணுவ பயிற்சிக்காக இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியா வருகை

சென்னை: ராணுவ பயிற்சிக்காக இலங்கை ராணுவ வீரர்கள் 18 பேர் நேற்று சென்னை வழியாக கேரளா சென்றடைந்தனர்.இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், இலங்கையை சேர்ந்த ராணுவ வீரர்கள் 18 பேர் வந்தனர். அவர்களுடன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரும் வந்தார். இவர்கள், இந்தியாவில் ராணுவ பயிற்சிக்காக வந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்கனவே கடும் எதிர்ப்பு உள்ளதால், இவர்கள் 19 பேரும் விமான நிலையத்திலிருந்து வெளியில் வராமல் உள்ளேயே தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று காலை 8.25 மணிக்கு சென்னையிலிருந்து கேரள மாநிலம் கொச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அவர்கள் 19 பேரும் கொச்சி சென்றனர். கேரள மாநிலத்தில் அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை ராணுவ வீரர்கள் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதோடு,  விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>