×

டெல்லியில் கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்பட மருத்துவ உபகரணங்கள் மத்திய அரசால் ஆவண செய்யப்படும்; அமித்ஷா பேட்டி

டெல்லி: நடப்பு மாத துவக்கத்தில் இருந்தே டெல்லியில் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ள சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: தற்போது தினசரி 60 ஆயிரம் எண்ணிக்கை வரையில் கொரோனா  பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை ஒரு லட்சமாக அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா  நோயாளிகளுக்கான ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை 500- ல் இருந்து 750 ஆக அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஐசிஎம்ஆர் உதவிசெய்வதாக தெரிவித்து உள்ளது” என்றார்.

உள்துறை அமித்ஷா கூறும் போது,  “ டெல்லியில்  கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். ஐசிஎம்ஆர் மற்றும் சுகாதாரஅமைச்சகத்தின் மொபைல் வேன்களை கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பயன்படுத்த வேண்டும். சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவர். கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்பட  தேவையான மருத்துவ உபகரணங்கள் மத்திய அரசால் ஆவண செய்யப்படும்” என்றார்.


Tags : Delhi ,Amitsha ,Central Government , Medical equipment including additional oxygen cylinders in Delhi will be documented by the Central Government; Interview with Amitsha
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!