ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; ராகுல் டிராவிட் ஆதரவு

பெங்களுரூ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியையும் சேர்க்க அண்மைகால காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ந்த ராகுல்டிராவிட் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனரான ராகுல் டிராவிட் அளித்துள்ள பேட்டி:

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது  நல்லது. அதில் சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், அது விளையாட்டின் விரிவாக்கத்திற்கு உதவும். எனவே கிரிக்கெட்டை சேர்க்க முயற்சிக்க வேண்டும். டி.20 போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் மிகச்சிறந்ததாக இருக்கும்என நான் நினைக்கிறேன்.

கிரிக்கெட்டை சேர்க்க மைதானம் உள்ளிட்ட சில வகையான வசதிகள் தேவைப்படும். கிரிக்கெட்டை சேர்த்தால் இதுவரை விளையாடாத நாடுகளிலும் வளர்க்க முடியும். ஏதாவது ஒரு வழியில் கிரிக்கெட்டை இடம்பெற செய்ய வேண்டும். இதற்கு சிறிதுகாலம் தேவைப்படும். ஆனால் இடம்பெறாமல் இருக்கக்கூடாது,என தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல்லில் அடுத்த ஆண்டு அணிகள் எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கும் திட்டத்தையும் டிராவிட் வரவேற்றுள்ளார். நிறைய திறமையான வீரர்கள் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். நிறைய அணிகள் இருக்கும்பொழுது, அனைத்து திறமையான வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள். தரத்திலும் குறைவு இருக்காதுஎன தெரிவித்துள்ளார்.

புதிய ஐபிஎல் அணியை வாங்க போட்டி

ஐபிஎல்லில் அடுத்த ஆண்டு குஜராத்தை மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு புதிய அணி உருவாக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. இதையடுத்து புதிய அணியை வாங்க நடிகர் சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவர்களை தவிர தொழிலதிபர் கவுதம் அதானி, நடிகை ஜூகிசாவ்லா,நடிகர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் கோதாவில் இறங்கி உள்ளனர்.

Related Stories:

>