×

வடகிழக்கு பருவமழை குறைந்ததால் ரோஜா பூங்காவில் உதிராத மலர்கள்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு, மலர் செடிகள் புதிதாக நடவு செய்யப்படும். அப்போது, அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்து குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். அதேபோல், ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவிலும், டிசம்பர் மாதமே கவாத்து செய்யப்பட்டு ஏப்ரல் மாதங்களில் அனைத்து செடிகளிலும் வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து விட்டு செல்வது வழக்கம்.

இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கவாத்து செய்யப்படவில்லை என்றாலும், மலர்கள் அதிகளவு காணப்படும். அதேசமயம், அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவமழை துவங்கியவுடன் பூக்கள் அழுகி உதிர்ந்துவிடும். ஆனால், இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால், மலர்கள் அதிகளவு உதிரவில்லை.  சில செடிகளில் உள்ள மலர்கள் மட்டுமே உதிர்ந்துள்ளன. தற்போது பெரும்பாலான செடிகளில் ரோஜா மலர்கள் காணப்படுகிறது. மேலும், புல் மைதானமும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது.  இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவில் உள்ள மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த பூக்கள் மேலும் ஒரு மாதம் வரை உதிராமல் தாக்கப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால், இம்முறை டிசம்பர் மாதம் வரை மலர்களை காண வாயப்புள்ளது.


Tags : rose garden , Ooty, rose garden, Nilgris, Northeast monsoon
× RELATED ஊட்டியில் மலர் நாற்று உற்பத்தி தீவிரம்