×

2022 சட்டசபை தேர்தல்; எங்களது முக்கிய திட்டமே எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது; அகிலேஷ் யாதவ்

டெல்லி: 2022 சட்டசபை தேர்தலுக்கான எங்களது முக்கிய திட்டமே எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்பதுதான் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 403 தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் 312 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி செய்தி வருகிறது.

4 வருடங்கள் முடிவடைய இருக்கும் நிலையில் 2022 தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதாவை தோற்கடிக்க தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் படாதபாடு படுகின்றன. பீகாரில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைத்தது என்றாலும் பயன் இல்லாமல் போனது. பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் மோடி ஆதிக்கத்தை வீழ்த்த அகிலேஷ் யாதவ், மயாவதியுடன் கைக்கோர்த்தார்.

அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 2022 சட்டசபை தேர்தலுக்கான எங்களுடைய முக்கிய திட்டமே எந்தவொரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்பதுதான் என சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Assembly Election ,alliance ,parties ,Akhilesh Yadav , 2022 Assembly Election; Our main project is not an alliance with any major parties; Akhilesh Yadav
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்