×

இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை தாண்டி, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்; மெகபூபா முப்தி

டெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை தாண்டி, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை தாண்டி, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இரு நாட்டு எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளிலும் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது வருத்தத்தை தருகிறது.

வாஜ்பாயும், முஷாரப்பும் ஒப்புகொண்ட அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்துவது, பேச்சுவார்த்தைக்கு நல்ல துவக்கமாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பல இடங்களில் தாக்குதல் நடத்தியது. இதில், நமது பாதுகாப்பு படையினர் மூவரும், பொது மக்களில் மூவரும் பலியாயினர். இதற்கு பதிலடியாக நம் வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் பலியாகினர்.

Tags : India ,Pakistan ,Mehbooba Mufti ,negotiations , India and Pakistan must transcend political constraints and begin negotiations; Mehbooba Mufti
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!