அனைவரது இல்லங்களிலும் ஒளி ஒளிரட்டும்..!! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

டெல்லி: தீபாவளி நன்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் என பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்குவதுடன், தாம் ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி – அன்பையும் மகிழ்ச்சியையும் அவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகையில் – இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மனிதர்களிடையே மேம்படுத்துவதற்கு – இத்தகைய இறை நம்பிக்கை சார் விழாக்கள் பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும். இந்நிலையில் கொரோனா பரவல் இருந்தாலும் அதனையும் வென்று தங்களின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாட்டு மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் அனைவரது இல்லங்களிலும் ஒளி ஒளிரட்டும், என கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது வாழ்த்தில்; அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த திருவிழா மக்களுக்கு மேலும் பிரகாசத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும். எல்லோரும் செழிப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>