×

தீபாவளி பண்டிகையை முன்னிடடு 7,461 பேருந்துகளில் 3,38,938 பேர் பயணம்: 91,198 பயணிகள் முன்பதிவு; போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வரை 7,461 பேருந்துகளில் 3,38,938 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் 91,198 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத்துறையின் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு தேதிகளில் பயணிப்பதற்காக 65 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான அறிவிப்பை கடந்த 3ம் தேதி போக்குவரத்துத்துறை வெளியிட்டது. அதன்படி கடந்த 10ம் தேதி முதல் நேற்று வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அப்போது தினசரி இயக்கக் கூடிய 2,000 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,510 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து 9,510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து இந்த மூன்று நாட்களுக்கு 5,247 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 5 இடங்களில் பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,000 பேருந்துகளில் 608 பேருந்துகளும், 131 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த 11ம் தேதி முதல் நேற்று காலை 9 மணி வரையில் மொத்தம் 6,039 பேருந்துகளில் 2,84,605 பயணிகள் பயணித்துள்ளனர்.

இதுவரை 89,480 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,000 பேருந்துகளில் 1625 பேருந்துகளும், 526 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. அதன்படி 11ம் தேதி முதல் நேற்று மாலை 6 மணி வரையில் மொத்தம் 7461 பேருந்துகளில் 3,38,938 பயணிகள் பயணித்துள்ளனர். இதுவரை 91,198 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : passengers ,Diwali ,Transportation Corporation Notice , 3,38,938 passengers on 7,461 buses ahead of Diwali: 91,198 passengers booked; Transportation Corporation Notice
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...