கோயம்பேட்டில் பரபரப்பு ஆம்னி பஸ் எரிந்து நாசம்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் அருகே வெளியூர்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த ஆம்னி பஸ்கள் அங்கேயே ஒருபுறமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை, லேசாக எரிந்த நிலையில் இருந்த ஆம்னி பஸ் திடீரென மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து, கோயம்பேடு தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால், ஏற்கனவே எரிந்த ஆம்னி பஸ்கள் இரண்டும் மேலும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>