3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: கருவூல ஆணையராக இருந்த சி.சமயமூர்த்தி தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலாளராகவும்,அயல்நாட்டு வேலைவாய்ப்பு கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த் கருவூல ஆணையராகவும், போக்குவரத்து துறை முதன்மை செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ் அயல்நாட்டு வேலைவாய்ப்பு கழக மேலாண் இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>