திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை கடந்த பிப்.19ம் தேதி துவங்கியது. 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்பு கூடுகளும், அகரத்தில் 9 குழிகள் தோண்டப்பட்டு 1,020 பொருட்களும், மணலூரில் 9 குழிகள் தோண்டப்பட்டு 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.அகரத்தில் மட்டும் ஆவணப்படுத்தும் பணி தாமதமாக நடந்து வந்தது. நேற்று பணிகள் முடிவடைந்ததை அடுத்து குழிகள் மூடப்பட்டன.