×

கார் டிரைவரிடம் வழிப்பறி

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த சொக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (38). கார் டிரைவர். நேற்று முன்தினம் உமாபதி, சொக்கனூர் கிராமத்துக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், திடீரென அவரை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி, ரூ.6 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பினர். புகாரின்படி வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : car driver , Detour to car driver
× RELATED தொடர் பைக் திருட்டு: கார் டிரைவர் கைது