×

பேஸ்புக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் மெகா மோசடி 2 பேர் ராஜஸ்தானில் கைது

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளான டிஜிபி சுனில் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டிஜிபி சந்திப் ரத்தோர், கூடுதல் கமிஷனர் தினகரன், ஐஜி சந்தோஷ்குமார், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், மாதவரம் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ் முத்து உள்ளிட்ட அதிகாரிகள் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி கொரோனா நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராஜஸ்தான் மோசடி கும்பலை சேர்ந்த ஷகீல்கான், ரவீந்தரகுமார் ஆகியோர் இந்த மோசடியை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் கடந்த வாரம் ராஜஸ்தான் சென்றனர்.

அங்கு ராஜஸ்தான் போலீசார் உதவியுடன் மோசடி கும்பலின் தலைவர் ஷகீல்கான் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த ரவீந்தரகுமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி கும்பலிடம் விசாரணை நடத்தினர். அதில், பிரபலமான ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி அதில் அவர்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அவர்களின் முகநூல் நண்பர்களிடம் நன்கொடை என்ற பெயரில் பல கோடி மோசடி செய்தது தெரியவந்தது. மோசடி செய்த பணத்தை இருவரும், கூகுல் பே, பே.டி.எம் வங்கி கணக்குகளுக்கு மாற்றி பின்னர் அதை ஸ்வைப் மிஷன் உதவியுடன் பணத்தை இருவரும் பிரித்துக்கொண்டது தெரியவந்தது.

Tags : Rajasthan ,IPS officers , Two arrested in Rajasthan for mega scam in the name of IPS officers on Facebook
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...