போதைப் பொருள் வழக்கில் மகன் கைதானதால் கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் ராஜினாமா

திருவனந்தபுரம்: பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மகன் பினீஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருப்பவர் கோடியேரி பாலகிருஷ்ணன். இவரது மகன் பினீஷ். இவர் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் கடந்த இரு  மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானதால், இரு வாரங்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அவரை கைது செய்தது்.

அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கோடியேரி பாலகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.ஆனால், ராஜினாமா செய்ய அவர் மறுத்தார்.   இந்நிலையில், இவர் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். உடல்நலக் குறைவால் ராஜினாமா செய்வதாக, கட்சி தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ ஏற்றுக் கொண்டுள்ளது. அவருக்கு பதிலாக, தற்காலிக மாநில செயலாளராக விஜயராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>