திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

திசையன்விளை: திசையன்விளை வி.எஸ்.ஆர்.இண்டர்நேசனல் பள்ளியில் தீபாவளி மற்றும் குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 800ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியில் 1ம் வகுப்பு மாணவன் ஆஷிஸ் பிரான்விக், 3ம் வகுப்பு ஜெர்லினும், 4 முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தானியங்கள் பயன்படுத்தி ஓவியம் வரைதல் போட்டியில் 4ம் வகுப்பு மாணவன் குமரன் ராமச்சந்திரன், 5ம் வகுப்பு மாணவி கேத்திலேனியும், 7 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சாக்லேட் கவர்களை பயன்படுத்தி வெடிகள் தயாரித்தல் போட்டியில் 12ம் வகுப்பு மாணவர் சஞ்சய், 7ம் வகுப்பு சாய் சிவராமும், 7 முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு பூக்கோலம் இடுதல் போட்டியில் 12ம் வகுப்பு மாணவிகள் மிதுனா, மித்ரா மற்றும் 11ம் வகுப்பு மாணவி இவாஞ்சலின் ஜெசிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் இப்போட்டிகளில் தனித்தனியாக சிறப்பாக செய்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வீடு தேடி சென்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பள்ளி இயக்குனர் சவுமியாஜெகதீஷ், துணைமுதல்வர் எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தீபாவளி மற்றும் குழந்தைகள் தினவாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீபாவளி வாழ்த்துகளும் தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories:

>