×

தூத்துக்குடி மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

தூத்துக்குடி: தீபாவளியை விபத்தின்றி பாதுகாப்பாக  கொண்டாடுவது குறித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் தீயணைப்புத் துறை சார்பில்  விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தூத்துக்குடி தீயணைப்பு நிலையம் சார்பில் தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு சிறுவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது  தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மாநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி  பழைய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்களிடம் பாதுகாப்பாக பட்டாசுகளை  வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர்  குமரேசன் தலைமையில் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து   தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான தீயணைப்புபடை  வீரர்கள் மாநகர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ‘பட்டாசுகளை பாதுகாப்பாக  வெடிப்பது’ தொடர்பான துண்டுபிரசுரங்களை வழங்கி வருகின்றனர். தீபாவளி  அன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில்  முக்கியமான மூன்று இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி  வைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகை அன்று  மாவட்டம் முழுவதும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் 196 தீயணைப்பு  வீரர்கள் சிறப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வைகுண்டம்: இதேபோல் வைகுண்டத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு தலைமை வகித்த வைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி, விழிப்புணர்வு பிரசாரத்தைத் துவக்கிவைத்தார். இதையொட்டி போக்குவரத்து பிரிவு முத்துக்குமார் தலைமையில், ஏட்டுக்கள் ராஜமூர்த்தி, ஜெசுபால் ஞானதுரை மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் மாணிக்கம், சீனிவாசகம், அருள்முருகன், சண்முகசுந்தரம், ராமஜெயம் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை மக்களிடம் வழங்கினர். வைகுண்டம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பிரசாரம் பஸ் நிலையம், அரசு பணிமனை, மேடைப்பிள்ளையார் கோவில் தெரு, புதுக்குடி உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக தாலுகா அலுவலகம் பகுதியில் நிறைவடைந்தது.

Tags : firefighters ,Thoothukudi district , Awareness campaign for firefighters in Thoothukudi district
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...