ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக்.ராணுவம் அத்துமீறல்...!! இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்; தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியான உரி வட்டாரத்தில் இந்தியா, பாக். படைகளுக்கிடையேயான தாக்குதலில் 8 பாக். ராணுவம் வீரர்கள் உயிரிழந்தனர். சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும்,பாகிஸ்தான் திருந்தியபாடில்லை.  இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல் உயிரிழந்தார். அதேபோல் மேலும், இரு வீரர்களும் உயிரிழந்தனர்.  பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.  பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பூஞ்ச், கெரன் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்மீறி தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Related Stories:

>