காசநோய் விழிப்புணர்வு தொடரில் நடிக்கும் சானியா மிர்சா

மும்பை: பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா நடிகையாக அவதாரம் எடுக்க உள்ளார். காசநோய் விழிப்புணர்வு வெப்சீரியல் ஒன்றில் அவர் நடிக்க உள்ளார். இதுகுறித்து சானியா மிர்சா கூறியுள்ளதாவது: நம் நாட்டில் இருக்கும் நீடித்த நோய்களில் ஒன்று காசநோய். காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களாக இருக்கின்றனர்.

அதைச் சுற்றியுள்ள தவறான கருத்துகளை மாற்றுவது மிகவும் அவசரத் தேவையாக உள்ளது அது தொடர்பான தொடரில் நடிக்க உள்ளேன். தொடர் அழுத்தமாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சொல்கிறது. நம் நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவரும் காசநோய் பற்றி இந்த தொடரில் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>