×

டெல்லியில் அடுத்த 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும்: முதல்வர் கெஜ்ரிவால் நம்பிக்கை

டெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு உச்சநிலையில் உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தினசரி கொரோனா பலி எண்ணிக்கை நேற்று  100 என்ற எண்ணிக்கையை  தொட்டது.  

வெள்ளிக்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் புதிதாக 7,332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தவர்களில் 104 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் கடந்த சில நாள்களாகவே கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 70 - 80 ஆக இருந்து வருவது, டெல்லியில் கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை வீசுகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 6,462 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியதை அடுத்து, இதுவரை அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,16,580 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் மந்திரி கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், “ கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது எனக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று நம்புகிறேன். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது காற்று மாசு மிகப்பெரிய காரணம். காற்று மாசு அதிகரித்த பிறகே, டெல்லி தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது” என்றார்.

Tags : outbreak ,Corona ,Kejriwal ,Delhi , Corona outbreak in Delhi in next 10 days: Chief Minister Kejriwal hopes
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...