காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதற்றமானவர், அறியப்படாத குணம் கொண்டவர்: அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

வாஷிங்டன்: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதற்றமானவர் என்றும், அறியப்படாத குணம் கொண்டவர் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, The Promised Land என்ற பெயரில் தனது அரசியல் நினைவு குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்திய தலைவர்கள் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பதற்றமானவர் என்றும் அறியப்படாத குணம் பெற்றவர் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஆசிரியரை கவுரவிக்க விரும்பும் மாணவராகவும், அதே நேரத்தில் கவனத்தை ஈர்க்க தெரியாதவராகவும் ராகுல்காந்தி இருப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், தனது பாதுகாப்பு செயலர் பாப் கோச்சும், உணர்ச்சியற்ற ஒருமைப்பாட்டை கொண்டவர்கள் என ஒபாமா தனது நினைவுக்குறிப்பில் தெரிவித்துள்ளதாகவும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருக்கும் போது, ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார். இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் ஆகியோரும் அடங்குவர். ஒபாமாவின் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ராகுல்காந்தி, 2017ம் ஆண்டு ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது அவரை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>